இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 செப்டம்பர் 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்தார்.
அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர் ஷால்க் ஆகியோர் பல்வேறுபட்ட இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்தளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், பொருளாதார நெருக்கடி முதல் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் வரையிலான முக்கியமான விடயங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். நல்லிணக்கம், ஊக்குவித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான தேசிய முயற்சிகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முன்னேற்றம் குறித்து அமைச்சர் சப்ரி தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விஷேடமாக விளக்கினார்.
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், பல்தரப்பு அரங்குகளில் இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உறுதியான ஆதரவை உறுதிப்படுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 செப்டம்பர் 29