பாட்னா: இலவச நாப்கின் கேட்ட பள்ளி மாணவியிடம் அடுத்து ஆணுறைகளும் கேட்பீர்களா என அம்மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் எரிந்து விழுந்த சம்பவம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம், பள்ளி மாணவி ஒருவர், இலவசமாக நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதனால் கடுப்பான அதிகார ஹர்ஜோத் கவுர், இன்று நாப்கின் கேட்பிர்கள், நாளை அரசிடம் ஜீன்ஸையும், பிறகு அழகான ஜீன்ஸையும் கேட்பீர்கள், அதற்கு பிறகு காண்டமையும் கேட்பீர்களா என அருவருக்கத்தக்க வகையில் பதில் கூறினார்.
“சம்ரித் பீகார்” பற்றிய ஒரு கருத்தரங்கத்தில், பள்ளி மாணவிகளுடன் உரையாடிக் கொண்டிருந்த பீகார் மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர், மாணவி ஒருவர் மலிவு விலையில் , ரூ.20-30க்கு மலிவு விலையில் சானிட்டரி பேட் கொடுக்க முடியுமா?” என்று கேட்டாள்.
இதற்கு பதில் அளித்த அதிகாரி, நாளை அரசிடம் ஜீன்ஸையும், பிறகு அழகான ஜீன்ஸையும் கேட்பீர்கள். “இறுதியில்,அரசாங்கம் உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு முறைகளும், ஆணுறைகளையும் கொடுக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றவர், எல்லாவற்றையும் இலவசமாக அரசு தர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள், “நீங்கள் ஏன் அரசாங்கத்திடம் இருந்து எதையும் இலவசமாக பெற வேண்டும்? இந்த சிந்தனை தவறானது. அதை நீங்களே செய்யுங்கள்,” என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.
அதுபோல மற்றொரு மாணவி, பள்ளியின் பெண்கள் கழிவறை இன்னும் சேதமடைந்து, சிறுவர்கள் அதை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள், அதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த அதிகாரி, “சொல்லுங்கள், உங்களுக்கு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனி கழிப்பறை இருக்கிறதா? என சாடியதுடன், நீங்கள் பல விஷயங்களைக் கேட்டால் அது எப்படி கிடைக்கும் என்றும் கூறினார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரியின் இந்த பதில் சர்ச்சையாகி உள்ளது. சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.