மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவு கையிருப்பு மற்றும் போசாக்கு பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப கலந்துரையாடல் நேற்று (28) மாலை 3.00 மணிக்கு செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங் அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
உணவு கையிருப்பு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்தல் பொருளாதாரப் புத்துயிர் கேந்திரநிலையங்களை வலுவூட்டல் தொடர்பாக சனாதிபதியின் மற்றும் பிரதம மந்திரி அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைவாக மாவட்ட மாகாண பிரதேச கிராம மட்டங்களில் ஸ்தாபிப்பது தொடர்பான துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கு எந்தவெரு சந்தர்ப்பத்திலும் போசாக்கின்மை உணவு பற்றாக்குறை எற்படுவதற்கு வாய்பளிக்க கூடாது என்பதில் சகலதரப்பினரும் கவனம் செலத்தப்படுதல் வேண்டும்.
இவ்வகையான செயல்திட்டத்தின் ஊடாக நாட்டின் உணவு பஞ்சம் போசாக்கின்மை எற்படாதவகையில் நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு இக்குழுவினர் சிறப்பான முறையில் செயல்பட்டு நாட்டின் ஸ்திரனமான நிலைக்கு அயராது பாடுபடவேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இன் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர்கள், வலையக்கல்வி பணிப்பாளர்கள், சுகாதாரப்பணிப்பாளர்கள், கால் நடை வைத்தியர்கள், தனியார் நிறுவன பிரதி நிதிகள், கமநல சேவைகள் பிரதி ஆணையாளர், நீர்பாசனம், சமுர்த்தி பணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.