கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலாம்பூர் பகுதியில் இருந்து இன்று தனது இந்திய ஒற்றுமை பயணத்தின் 22 வது நாள் பாதயாத்திரையை துவங்கிய ராகுல் காந்தி இன்றுடன் கேரளாவில் தனது யாத்திரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டமாக பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் தனது பயணத்தை துவங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா செல்லும் அவர் அங்கு 21 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், கேரள பயணத்தின் முடிவில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் பேசிய ராகுல் காந்தி, தனக்கு மூட்டுவலி மற்றும் முதுகுவலி இருப்பதால் தனது நடைப்பயணத்தின் போது அவ்வப்போது சிரமப்பட்டதாகவும்.
भैया की knee में pain हे वॉक करते वक्त, लेकिन सलाम हे इस शख़्स के जज़्बे को बिना परवाह किए बस चले जा रहा हे! 🙏🙏🙏🙏@DabangYogi3 @thispacino @Crazybakchod @anuragteddy pic.twitter.com/7GtziS0TKG
— Kashif ul Haq (@kashif_ul_haq_) September 29, 2022
அந்த நேரங்களில் அங்கு வரும் மக்களின் நிலையை பார்க்கும் போது தனது வலி மறந்து போவதாகவும், அதேபோல் அங்கு வருபவர்களின் வார்த்தைகள் தனது வலியை காணாமல் போகச் செய்ததாகவும் தனது கேரள அனுபவம் குறித்து அவர்களிடம் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.