அமைச்சர் பொன்முடியின் பேச்சு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் கோவையில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்ய மாட்டேன் எனக் கூறிய மூதாட்டியின் வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்கள் ஓசியாக பயணம் செய்கிறார்கள் என்று பொது வெளியில் பேசியது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் இன்று காலை கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயனச்சீட்டை கேட்டுள்ளார்.
அதற்கு நடத்துனர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் அந்த மூதாட்டி ஓசி டிக்கட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கட் கொடு என்று ஆவேசமாக நடத்துனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இலவசம்னு சொல்லிவிட்டு பொதுமக்களை ஓசி டிக்கெட் என்று அவமான படுத்துவதா என்று கொந்தளித்தது பேருந்தில் பயணித்த மற்ற பயணிகளின் கவனத்தையும் திசை திருப்பினார்.
நீண்ட நேரம் நடத்துனரிடம் விவாதத்தில் ஈடுபட்ட அந்த மூதாட்டி ஒருவிதமாக சமாதானம் அடைந்தார். இந்த சம்பவத்தை அதே பேருந்தில் பயணம் செய்த யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM