நீங்கள் எனக்கு ஓட்டு போடாவிட்டாலும் தாம் கடமையை தொடர்ந்து செய்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் பேசயிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூபாய் 40 கோடியில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பேசிய அவர், தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மு.க.ஸ்டாலின் உடைய ஆட்சி மக்களோடு மக்களாக இருந்து தொண்டு செய்யும் ஆட்சி. அதன்படி நாங்கள் செய்து வருகிறோம் என்றார்.
விரைவில் காட்பாடி ரயில் மேம்பாலம் புதிதாக கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்காக இவ்வளவு செய்தும் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இருந்தாலும் நான் உங்களுக்கு என் கடமைகளை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
வாக்கு அளித்தாலும், அளிக்காவிட்டாலும் மக்களுக்கான பணியாற்றுவது பிரதிநிதிகளின் கடமை. வாக்களிக்காதவர்களுக்கு சேர்த்து பணியாற்றுவது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லரை மாற்றிக் கொண்டுள்ளோம் விரைவில் திட்டத்தினை துவங்கி வழங்குவோம் என்றார்.
newstm.in