மோதர, கஜீமா தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஒரு வாரத்திற்குள் முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் இன்று (28) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த தோட்ட வீடுகள் தொடர்ந்தும் தீப்பிடிப்பது குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28) இடம்பெற்றது.
அங்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து தெரிவிக்கையில்…..
இந்த தோட்ட வீடுகள் தொடர்ந்தும் தீக்குள்ளாகி வருகின்றன. கடந்த ஒன்றரை வருடத்தில் மூன்று முறைகள் தீப்பிடித்துள்ளன. எனவே, இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முறையான விசாரணையை நடாத்துவோம். அந்த அறிக்கை கிடைத்த பின்னர், முறையான திட்டம் ஒன்றை மேற்கொள்வோம்.
கடந்த வருடமும் இந்த வீடுகள் தீப்பிடித்தன. அடிக்கடி தீப்பிடித்து எரிfpd;wJ தற்காலிக குடியிருப்பாளர்களை அகற்ற முடியுமா? ஏன்று பிரதமர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினரர்.
அதற்கு பதிலளித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
இத்தோட்டத்தில் வசிப்பவர்களிடமிருந்து வீடுகள் அவசியம் தேவைப்படுபவர்களை அடையாளம் காண்போம். இவர்களில் சிலர் பதுளையை சேர்ந்தவர்கள். அவ்வாறானவர்களுக்கு அந்தப் பிரதேசங்களில் வீடுகளை வழங்குவோம். இல்லையெனில் இது ஒரு பெரிய பிரச்சனையாகிவிடும். அரசாங்க பணத்தில் வீடுகள் கட்ட முடியாது. இந்த தீ விபத்து குறித்து பாரபட்சமற்ற முழுமையான விசாரணையை நடத்தி, விரைவில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்போம்.
கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீப் யசரட்ண தெரிவிக்கையில், மோதர கஜீமா தொடர் வீடமைப்பில் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இடைநிலை முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த தோட்டத்தில் தற்பொழுது 220 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1000 க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இருப்nபுர்ர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். இருப்பினும், இந்த தீயினால் 60 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 11 பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
இந்த தீ சம்பவத்தினால் இதுவரையில் 306 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்
தற்போது இடம்பெயர்ந்த அனைவரும் மோதர உயன சன சமூக மண்டபம் மற்றும் களனி நதி ஆலயத்தில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தேவையான உணவு முதலானவை வழங்கப்படுவதுடன் சர்வோதய அமைப்பின் பங்களிப்புடன் நிற்கதியான மாணவர்களுக்கு பாடசாலை சீருடை சப்பாத்து மற்றும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
கஜீமா தோட்ட பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவிக்கையில்,
கடந்த 1ஃ12 வருடத்திற்குள் இந்த வீடமைப்பு 3 முறை தீ குள்ளாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 28 வீடுகள் சேதமடைந்தன. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள்.
நகர அபிவிருத்தி சபையினால் இங்கு இடை முகாம் நடத்தப்படுகிறது. இங்கு குடியிருக்கும் சில நபர்களுக்கு அரசாங்கத்தினால் 2 அல்லது 3 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது அதன் இடைநிலை முகாமாக நகர அபிவிருத்தி அதிகார சபை இயங்கி வருகின்றது. இந்தத் தோட்டத்தில் வசிக்கும் சிலர் அரசிடமிருந்து இரண்டு, மூன்று நிரந்தர வீடுகளைப் பெற்றாலும் அவர்கள் இன்னமும் அத்தோட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத் தோட்டத்தில் 160 வீடுகள் இருந்தன. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீடடால் சுமார் 60 வீடுகள் அகற்றப்பட்டது. ஆனால் கடந்த கொரோனா காலத்தில் இந்தத் தோட்டத்தில் அனுமதியின்றி நிர்மாணப் பணிகள் அதிகரிக்கப்பட்டன என்று கிராம உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவிக்கையில், 2007/08 ஆண்டுகளில் தெமட்டகொட வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக கஜீமா வத்தையில் குடியமர்த்தப்பட்டனர். அதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபை இந்தக் காணியை இடைநிலை முகாமாகப் பயன்படுத்தி வருகின்றது. இங்கு குடியிருக்கும் அனைவருக்கும் 2014 ஆம் ஆண்டு வீடுகள் வழங்கப்பட்டு முழுமையாக விடுவிக்கப்பட்டனர். தற்போது தற்காலிக முகாம் தேவையற்றது. அத்தியாவசிய நேரங்களில் மக்களை அமர்த்துவதற்கு தேவையான எண்ணிக்கையில் வீடுகள் உண்டு. முன்னர் வீடுகளை வைத்திருந்தோரின் பெயர் பட்டியல் உண்டு. நகர அபிவிருத்தி அதிகார சபை 20 குடும்பங்களை குடி அமர்த்தியுள்ளது. ஏனைய 200 குடும்பங்கள் சட்டவிரோத குடியிருப்பாளர்கள். 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கு சட்டவிரோதமாக குடியிருந்தனர். நகர அபிவிருத்தி சபையினால் இந்த அனைத்து வீடுகளுக்கும் மதிப்பீடு thp இலக்கம் வழங்கப்பட்டு நீர் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இவர்கள் வாக்காளர் டாப்பிலும் உள் வாங்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் மேலும் இவ்வாறான தோட்ட வீடுகள் உண்டு. இருப்பினும், அடிக்கடி தீ பிடிg;GJ கஜீமா தோட்டமே ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 68 ஆயிரம் சேரி பகுதி வீடுகளுக்கு வீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாறு வீடுகள் வழங்க முற்பட்டால் 2 இலட்சம் வீடுகளையாவது வழங்க வேண்டும். அப்படியாயின் எம்மால் எமது இலக்கை அடைய முடியாது . நகர அபிவிருத்தி அதிகார சபை நட்டததில் இயங்கும் நிறுவனமாக மாறும்.
அமைச்சர்களான கலாநிதி பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, ஓய்வு பெற்ற ரியல் எட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர, ஹிரான் விக்ரமரட்ண, மதுர விதானகே, யதாமினி குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், பாதுகாப்பு பிரிவின் பிரதானி, சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.