கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை வேறுபடுத்துவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க ஒரு பெண்ணின் திருமண நிலையை காரணம் காட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. “தனியாக வாழும் அல்லது திருமணமாகாத பெண்களுக்கும் மருத்துவக் கருவுறுதல் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் கருக்கலைப்பு செய்ய 24 வாரங்கள் வரை உரிமை உண்டு” என்று அது மேலும் கூறியுள்ளது.

கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குப்படுத்துவது குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. நீதிமன்றம் மேலும் கூறுகையில், “கருத்தடை மருத்துவச் சட்டத்தின் கீழ், கற்பழிப்பு, பலாத்காரம் போன்றவை உட்பட,  திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு இடையிலான வேறுபாடு  கான்பது “செயற்கையானது மற்றும் அரசியலமைப்பு ரீதியாக நீடிக்க முடியாதது” என்றும் கூறியுள்ளது.

திருமணமாகாத பெண் 20-24 வாரங்களுக்குள் கருவை கலைக்கலாமா என்பது குறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ள நிலையில் இந்த தீர்ப்புகள் வெளி வந்துள்ளன. நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,  கருகலைப்பு தொடர்பான MTP சட்டத்தின் விளக்கம் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்றார். சமூகம் மாறும்போது சமூக இயல்புகள் மாறுகின்றன மற்றும் உருவாகின்றன. எனவே சட்டத்தில் மாற்றம் இல்லாமல் நீடிக்க இயலாது என்றார். பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் தடுக்கக்கூடியவை என்றும், மன ஆரோக்கியம்  மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

திருமணமான பெண்களும் பாலியல் வன்கொடுமை அல்லது பலாத்காரத்தில் இருந்து தப்பியவர்களில் ஒரு பகுதியாக இருக்கலாம். கணவரின் சம்மதமற்ற செயலால் ஒரு பெண் கர்ப்பமாகலாம். பாலினம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை  என்பது குடும்பங்களிலும் உள்ளது என்று நீதிபதி சந்திரசூட் கூறினார். இறுதியில் ஒவ்வொரு பெண்ணும் அவளது  சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு பொருளாதார, கலாச்சார அல்லது சமூக காரணிகள் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களிடையே செயற்கையான வேறுபாட்டை நீடிக்க முடியாது என்று நீதிபதி கூறினார்.

“பெண் தான் கருவை சுமக்கிறாள். எனவே, கரு வேண்டுமா வேண்டாமா என்பதை பெண் தான் முடிவெடுக்க வேண்டும். இந்த உரிமை மறுக்கப்படுவது அவளது கண்ணியத்தை அவமதிக்கும் செயலாகும்” என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.