சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பிரதானகுடிநீர் குழாயில் புதிய குழாயை இணைக்கும் பணி காரணமாக நாளை 8 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்துசெல்லும் 2 ஆயிரம் மிமீ உந்து குழாயில் 500 மிமீ குழாயை இணைக்கும் பணிநாளை (செப்.30) காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரேற்று பணி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஆகையால், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கூறிய நேரத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள அம்பத்தூர் 8144930907, அண்ணாநகர் 8144930908, தேனாம்பேட்டை 8144930909, கோடம்பாக்கம் 8144930910, வளசரவாக்கம் 8144930911, ஆலந்தூர் 8144930912, அடையார் 8144930913, பெருங்குடி 8144930914 ஆகிய மண்டல பொறியாளர்களின் எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.