தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 06 வருடங்கள்

2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் நிறைவேற்றப்பட்டு 6 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

சர்வதேச தகவல் அறியும் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வெகுஜன ஊடக அமைச்சால் கொண்டாடப்படுகிறது.

இதற்கமைய வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. 
 
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக, தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரியுமான பியதிஸ்ஸ ரணசிங்க கலந்து கொண்டார். இவரினால் தொகுக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான தொகுப்பு கையேடு மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.
 
மேலும், இந்த நிகழ்விற்கு வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஜயசுந்தர, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திலித் கருணாரத்ன, வெகுஜன ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அந்தந்த அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தகவல் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.