'தமிழகம் அமைதியான பூங்காவாக இருக்க வேண்டும்' – ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்

அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஒரு தலை பட்சமாக தங்கள் கருத்துகளை சொல்லாமல் எல்லோரும் சமம் என்ற கருத்தோடு பணியாற்ற வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
சென்னை கிழக்கு தாம்பரம் சங்கரா வித்யாலயா பள்ளியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். பின்னர் பிரக்ஞானந்தாவிற்கு சதுரங்க சாதுர்ய மணி விருதும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வழங்கி கௌரவித்த பிறகு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கொலுவை பார்வையிட்டார்.
image
நிகழ்வில் பேசிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா படிப்பை விருப்பத்தோடு செய்யவும், ஒருவித அழுத்தத்தின் காரணமாக செய்ய வேண்டாம், முழு முயற்சியோடு ஒரு வேலையை செய்யுங்கள் அதன் முடிவு எதுவாயினும் பரவாயில்லை, விளையாட்டில் நான் நன்றாக விளையாடி தோற்றாலும் கவலை படமாட்டேன், ஆனால் சரியாக விளையாடாமல் வெற்றி பெற்றாலும் மன நிறைவாக இருக்காது என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய தெலங்கானா ஆளுநர்… பிரக்ஞானந்தா விளையாட்டு வீரர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அவரவர் கருத்தை கூறலாம் விவாதம் செய்யலாம், ஆனால் ஒருவர் கருத்தை மற்றொருவர் மீது திணிக்கக் கூடாது.
image
கடவுள் இல்லை என சிலர் கூறிவிட்டு யாருக்கும் தெரியாமல் கடவுளை வணங்கி பொட்டு வைத்துவிட்டு அழித்து விடுவார்கள், நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. கடவுள், நாம் முயற்சி செய்தால் நமக்கு தூண்டிவிடுவார். கடவுள் இருக்கிறார் என்பதற்காக மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பூஜை செய்து விட்டால் பாஸாக முடியாது, படிக்க வேண்டும், கடவுளை வழிபட்டால் நாம் படித்த கேள்வி தேர்வில் வரும், படித்தது மறக்காமல் இருக்கும் என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்… குழந்தைகளுக்கு பிரக்ஞானந்தவை பார்த்தவுடம் அவரை போல் சாதனையாளராக ஆக வேண்டும் என்ற எண்ணம் வரும், மிக இளம் வயதில் இருந்தே அவர் சாதனையாளராக இருக்கிறார். மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல், எல்லா விளையாட்டுகளிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும், பள்ளிகளில் தற்காப்பு கலைகளை கற்றுத்தர வேண்டும், வெடிகுண்டு கலாச்சாரம் தவறான நடைமுறை, கருத்திற்கு கருத்தாக சொல்லலாம் பெட்ரோல் குண்டு போட கூடாது,
image
தமிழகம் அமைதியான பூங்காவாக இருக்கணும், அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஒருதலை பட்சமாக தங்கள் கருத்துகளை சொல்லாமல் எல்லோரும் சமம் என்ற கருத்தோடு பணியாற்ற வேண்டும் என கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.