சென்னை: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டு உள்ளது. அதுபோல ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எதிராக விசிக அறிவித்த மனித சங்கிலி போராட்டத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
அக்டோபர் 2ந்தேதி அன்று தமிழகம் முழுவதும் சுமார் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்ல காவல்துறையினர் அனுமதி கேட்ட நிலையில், அதற்கு பதில் தெரிவிக்காத நிலையில், நீதிமன்றத்தை நாட்டி அனுமதி பெற்றது. மேலும் 28ந்தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க அறிவுறுத்தியது.
ஆனால், திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மதவாத கட்சிகளின் எதிர் ஊர்வல அறிவிப்பு காரணமாக மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்தது. சட்டம்- ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ள-
மாநிலத்தில் பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு செய்துள்ளது. மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் ஊத்வலத்துக்கு எதிராக, அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை மனித சங்கிலி, பேரணி நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகளும் குரல் கொடுத்த நிலையில், தமிழகஅரசின் அமைதி விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விசிகவின் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தவும் அனுமதி தர இயலாது என காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், அக்.2-ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்டவை நடத்த எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என தமிழக காவல்துறை திட்டவட்டமாக தகவல் கூறியுள்ளது.