சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை இரவு 8 மணிக்கு டிவிட்டர் ஸ்பேஸில் உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாதத்தினை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி (DMK ITWing) Twitter Spaces-ல் திராவிடத்தை கொண்டாடுவோம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நாள்தோறும் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், செப்டம்பர் மாதம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், இறுதிநாளான நாளை இரவு 8மணி அளவில், தமிழ்நாடு முதலமைச் சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டர் ஸ்பேஸில் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.