புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன், தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் ‘கோ-லொக்கேஷன்’ ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் கைது செய்தது. தற்போது, திகார் சிறையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதேபோல், தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் குழு தலைமை செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியத்திற்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.