சரித்திரம் விரும்பும் தமிழர்களின் 70 ஆண்டு கனவாக இருப்பது பொன்னியின் செல்வன் புதினம். பொன்னியின் செல்வன் நாவல் 1950-ம் ஆண்டு அக்டோபர் 29 முதல் 1955-ம் ஆண்டு வரை தொடர்கதையாக வெளியான இந்த புதினம், உண்மைச் சம்பவங்களும் புனைவுகளும் சரிசமமாகக் கலந்த ஒரு சரித்திர விருந்து!
பிற்காலச் சோழர்கள் குறித்த வரலாற்றை முதன்முதலில் விரிவாக எழுதியவர் நீலகண்ட சாஸ்திரி. இது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பிறகு வை. சதாசிவ பண்டாரத்தார், மா. இராசமாணிக்கனார் ஆகிய இருவரும் பிற்காலச் சோழர்களின் வரலாற்றை பல கல்வெட்டுகள், செப்பேடுகள் கொண்டு ஆய்வு செய்து சுவைபட எழுதினார்கள். இதன்பிறகே சோழர்களின் நிலவுடைமை, நிர்வாகம், கோயில் புனரமைப்பு, கலைகள், சமயப் பணிகள், வீரம், பொருளாதாரம், நீர்ப்பாசனம் போன்ற பல நுண்ணாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆய்வுக் கட்டுரைகள் படித்த மேல்தட்டு மக்களால் குறிப்பாக சரித்திர ஆர்வம் மிக்கவர்களாலேயே அறியப்பட்டது.
இந்த வரலாறுகளைப் படித்த கல்கி, சரித்திர ஆதாரங்களை மையமாக வைத்து ‘பொன்னியின் செல்வன்’ என்ற புதினத்தை கற்பனை கலந்து தொடர்கதையாக வெளியிட்டார். அதுவும் பிற்காலச் சோழர்களின் வளர்ச்சியை நிர்ணயித்த திருப்புறம்பியம் என்ற ஊரிலேயே இந்த நாவலை எழுத வேண்டும் என்று தீர்மானித்தார் கல்கி. வை. சதாசிவ பண்டாரத்தார் சொந்த ஊர் திருப்புறம்பியம். இவரது பிற்கால சோழர் சரித்திரம் போன்ற பல படைப்புகளை திருப்புறம்பியத்தில் படித்துத் தெளிந்த பிறகே கல்கி இந்த புதினத்தை எழுதத் தொடங்கினார்.
இந்த புதினத்துக்குப் பிறகே பலரும் முன் வந்து சோழர்களின் வரலாற்றை இன்னும் விரிவாக ஆய்வு செய்து பல பல கல்வெட்டு ஆய்வுகள் செய்து புதிய கருத்துக்களை வெளியிட்டனர். வரலாறு உண்மைகளின் அடிப்படையில் எழுதப்படுவது. புதினம் என்பது அப்படி அல்ல, கதையின் தேவைக்கேற்ப வரலாற்று கதாபாத்திரங்கள் சிலரைக் கொண்டும், கதையின் மையம் சிதைந்து விடாமல் கற்பனை பாத்திரங்களையும் இணைத்து வரலாற்று சம்பவங்களை தொடர்ந்து சுவையோடு சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை கல்கி அழகாக எடுத்துச் சென்று இருப்பார். நந்தினியை கற்பனை பாத்திரம் என்றால் இன்றும் நம்பாமல் இருப்பவர்கள் பலர். அத்தனை அழகான தவிர்க்க முடியாத கதாபாத்திரம் அது.
உண்மையில் தமிழகத்தில் வரலாறு என்ற சொல்லைப் பலரும் பேசவும், படிக்கவும், பயணம் செய்யவும் தொடங்கி வைத்த படைப்பு பொன்னியின் செல்வன் என்று அறுதியிட்டுக் கூறலாம். பாத்திரங்கள் மட்டுமின்றி இந்த கதை நடைபெற்ற இடங்கள் யாவும் சுவாரஸ்யமானவை, சுகமானவை. வீராணம் தொடங்கி கோடியக்கரை வரை உள்ள அந்த இடங்கள் அவசியம் காண வேண்டியவை. அந்த இடங்களைக் காண இன்றுவரை தமிழ் மக்களுக்கு ஒரு ஈர்ப்பும் ஆவலும் இருந்தே வருகிறது. வீராணம் ஏரி தொடங்கி, காட்டுமன்னார்கோவில் பெருமாள் கோயில், அனந்தேஸ்வரர் கோயில், மேலக் கடம்பூர், கீழக்கடம்பூர் கோயில்கள், பழையாறை கைலாசநாதர் கோயில், ராஜராஜனின் பள்ளிப்படை, நந்திபுர விண்ணகரம், சோமநாதேஸ்வரர் கோயில், பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, திருப்புறம்பியம் பள்ளிப்படைகள், தஞ்சை பெரிய கோயில், கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் என பொன்னியின் செல்வனில் வரும் இடங்கள் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத சரித்திர சாட்சிகளாக விளங்கி வருகின்றன. இந்த இடங்களை ஒரு புனிதப் பயணம் போல சென்றுவர இன்றும் பலரும் விருப்பம் கொண்டுள்ளார்கள்.
இவர்களின் விருப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும், உண்மையான வரலாற்றை உரிய ஆய்வாளர்கள் கொண்டு சொல்லவும் உங்கள் விகடன் குழுமம் விரும்பியது. அதன் விளைவாக 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் என்ற சிறப்புமிக்க வரலாற்றுப் பயணத்தைக் தொடங்கியது. 4 முறைகள் வெற்றிகரமாக நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களோடு பயணித்து சிறப்பும் கொண்டது. இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.
3 பகல், 2 இரவுகள் என நடக்கவிருக்கும் இந்தப் பயணத்தில் சோழர்கள் உலாவிய இடங்களில் தகுந்த வரலாற்று ஆய்வாளர்களோடு பயணித்து சோழர்களின் பெருமைகளை அறிந்துகொள்ள இருக்கிறோம். அதோடு அற்புதமான கலை நிகழ்ச்சிகள், பாரம்பர்யமிக்க கலை அழகு கொண்ட தங்கும் விடுதிகள், அறுசுவை உணவு வசதி, சிறப்புப் பரிசுகள் என அனைத்து அம்சங்களோடும் திகழும் சரித்திர யாத்திரை இது.
ஏற்கெனவே 4 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை தற்போது மீண்டும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.
முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404
முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.
நிகழ்ச்சி விவரங்கள்:
அக்டோபர் 8 (சனிக்கிழமை) – அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விகடன் அலுவலகத்தில் இருந்து சொகுசுப் பேருந்துப் பயணம். மதியம் 3 மணிக்கு மேல் வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், பெருமைகள், மேலைக் கடம்பூர், கீழைக்கடம்பூர் கோயில்கள்…
இரவு தங்கல் – லக்ஷ்மி விலாஸ் காட்டேஜ் (காட்டுமன்னார்கோவில் அருகே) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.
அக்டோபர் 9 (ஞாயிறு) – பழையாறை கோயில்கள், கல்வெட்டுகள், திருப்புறம்பியம், கலை நிகழ்வுகள்.
இரவு தங்கல் – இண்டிகோ ஹெரிடேஜ் காட்டேஜ் (சுவாமி மலை அருகில்) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.
அக்டோபர் 10 (திங்கள்) – தஞ்சைக் கோயில், கல்வெட்டுகள், கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் + கலை நிகழ்வுகள்.
இரவு சென்னை திரும்பல்…
அக்டோபர் 11 – அதிகாலை 6 மணிக்கு சென்னை அடைதல்.
குறிப்பு: நேரம் பொறுத்து பார்க்கும் இடங்களும் சற்றே மாறலாம்.
எவ்வளவு கட்டணம்?
நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 18,000 (ஜி.எஸ்.டி. உள்பட).
வீராணம் ஏரியும், காட்டுமன்னார்கோவில் கல்வெட்டுகளும், கடம்பூர் ரகசியங்களும், பழையாறைப் பெருமைகளும், தஞ்சை பெரியகோயில் பிரமாண்டமும், கோடியக்கரை கடற்கரையும், குழகர் கோயில் அற்புதங்களும் ஆயிரம் ஆயிரம் கதைகளைச் சொல்ல உங்களுக்காகக் காத்திருக்கின்றன. வாருங்கள், விகடன் நடத்தும் வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்!
முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404