புதுடில்லி, :’என்.ஓ.சி., எனப்படும் காவல் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற இனி, தபால் அலுவலகங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவா மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம்’ என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு:வேலை, கல்வி மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்காக வெளிநாடு செல்வோர் பாஸ்போர்ட் பெற, காவல் துறையின் தடையில்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன், பாஸ்போர்ட் மையம், வெளிநாடுகளில் வசிப்போர் துாதரகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
ஆனால், நேற்று முதல், நாடு முழுதும் 428 தபால் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவா மையங்களிலேயே, ‘ஆன்லைன்’ வாயிலாக காவல் துறையின் தடையில்லா சான்றுக்கும் விண்ணப்பிக்கலாம். இதனால், பாஸ்போர்ட் மிக விரைவில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி, :’என்.ஓ.சி., எனப்படும் காவல் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற இனி, தபால் அலுவலகங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவா மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம்’ என வெளியுறவு அமைச்சகம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்