ஜெய்பூர், ராஜஸ்தானில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் வீடு இடிந்து விழுந்ததில், துாங்கிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள் பலியாகினர்; தாயும், மற்றொரு குழந்தையும் பலத்த காயமடைந்தனர்.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, தோல்பூர் மாவட்டத்தின் மனியா நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், ஒரு பழைய வீடு இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது ஐந்து குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கினர்.இந்த விபத்தில், ௨ முதல் ௫ வயது வரையிலான மூன்று பெண் குழந்தைகள் மற்றும் நான்கு மாதமேயான ஆண் குழந்தை என நான்கு குழந்தைகள் சம்பவ இடத்தில் இறந்தன. தாய் மற்றும் ஒரு சிறுமி பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த நேரத்தில் குழந்தைகளின் தந்தை இல்லாததால், அவர் உயிர் தப்பினார்.
ஜெய்பூர், ராஜஸ்தானில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் வீடு இடிந்து விழுந்ததில், துாங்கிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள் பலியாகினர்; தாயும், மற்றொரு குழந்தையும் பலத்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்