போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் இந்திய தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பழங்கால கோவில்கள், சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ம.பி.,யின் பந்தவ்கார்க் புலிகள் சரணாலயத்தில் 170 சதுர கி.மீ., பகுதியை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் கடந்த மே 20 முதல் ஜூன் 27 வரை தீவிரமாக ஆய்வு செய்தது. அதில், 26 கோவில்கள், 26 குகைகள், 2 கல்வெட்டுகள், 2 ஸ்தூபிகள், 2 மடங்கள், 46 சிற்பங்கள் மற்றும் 19 நீர்கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கு கண்டுபிடிக்கப்பட்டவை, அரசரகள் போதஸ்ரீ, பட்டதேவா, பீம்சேனா காலத்தை சேர்ந்தவை. கல்வெட்டுகளில் மதுரா, கவுசமி, பவடா, சப்தநாயரிகா மற்றும் வேஜபாரதா உள்ளிட்ட இடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடவுள் விஷ்ணுவின் அவதாரங்களான வராஹா, மச்ச அவதாரங்களை குறிக்கும் வகையிலான சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் இந்திய தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பழங்கால கோவில்கள், சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ம.பி.,யின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்