யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று (29) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறக்கப்பட்டது.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்காக புதிய கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் கடற்றொழில் அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார், யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் இராதாகிருஷ்ணன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்