புதுடில்லி:வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களில், இந்தியா ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பதாக, ‘எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் ஐரோப்பிய எரிசக்தி பிரச்னை ஆகியவை, ஒவ்வொரு நாட்டிலும் வளர்ச்சியை தாக்குவதாக உள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டில், 7.3 சதவீத வளர்ச்சியுடன், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில், இந்தியா ஒரு நட்சத்திரமாக இருக்கிறது.பணவீக்கம், உண்மையான குடும்ப வருமானத்தை குறைத்துள்ளது.
வணிக நம்பிக்கை மோசமடைந்துள்ளது. இதனால், இரண்டாவது காலாண்டில், வளர்ந்து வரும் சந்தைகளில் வளர்ச்சி குறைந்துள்ளது. எங்களுடைய பார்வையில், சீனாவை தவிர்த்த 16 வளர்ந்து வரும் பொருளாதாரங்களில், நடப்பு ஆண்டில், வளர்ச்சி 5.2 சதவீதத்தை எட்டும். இந்தியா 7.3 சதவீத வளர்ச்சியுடன், இந்த நாடுகளில் நட்சத்திரமாக இருக்கும். அமெரிக்காவை பொறுத்தவரை, சிறிய அளவிலான பொருளாதார மந்தநிலையை
எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement