வேடந்தாங்கல் பறவை சரணாலயம் அருகே உள்ள சன் ஃபார்மா நிறுவனத்துக்கு ரூ.10 கோடி அபராதம்!

சென்னை; வேடந்தாங்கல் பறவை சரணாலயம் அருகே உள்ள சன் ஃபார்மா நிறுவனத்துக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சரணாலயம் அருகே  சன் பார்மா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் பறவைகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆனால், கடந்த அதிமுக அரசு, விதிகளை மீறி சன் ஃபார்மாநிறுவன விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்க மறுத்து வந்தது.

மேலும்,   சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது,  சன் பார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய  அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சரணாலயம் அமைந்திருக்கு பகுதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே 5 கி.மீ என்ற சுற்றுப்பரப்பளவை 3 கி.மீட்டராக குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், வேடந்தாங்கள் நிலபரப்பு குறைக்கபடுவதற்கு எதிராக மனுதாரர் மத்திய அரசிடம் மனு அளித்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு சென்றது. இந்த தீர்ப்பாயம் பல கட்ட விசாரணை நடத்திய நிலையில், 1994ம் ஆண்டு முதல் 2006வரையில் நடந்த விரிவாக்க பணிகளுக்கு  சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்றும், EIA அறிவிப்பை மீறி விரிவாக்கம் செய்தது சட்டம் என்றும் என்று உத்தரவிட்டு ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.