லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை உடனடியாக பெறுவதற்கு உள்நாட்டு வெளிநாட்டு வழங்குனரிடம் இருந்து விலை மனுக்களை பெற விளம்பரம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
900 மெகாவாட் கொள்ளளவு கொண்ட லக்விஜேயா நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை பெறுவதற்கான ஏலத்தை நடாத்துவதற்கு அமைச்சகத்தினால் சிறப்பு குழு நியமிக்கப்பட்டு அக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காலவரை ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்சம் 180 நாட்கள் கடன் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான நிலையான
விலை அமெரிக்க டொலர் ($)அல்லது ரூபாவில் (LKR) இல் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஒக்டோபர் 20 ஆம் திகதி காலை 10.00 மணி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.