உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் விஜயகுமார் (32) என்பவர், தீவிர வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த பார்த்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் ஏராளமான ஸ்பூன்களை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அவருக்கு, 2 மணிநேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரின் வயிற்றில் இருந்து தலைகள் இல்லாத 63 ஸ்பூன்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். மேலும், போதை ஒழிப்பு மையத்தில் அவரை கட்டாயப்படுத்தி, ஸ்பூன்களை உட்கொள்ள வைத்ததுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், விஜயகுமார் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து, விஜயகுமாரின் உறவினர் அஜய் சௌத்ரி கூறியதாவது,”விஜயகுமாருக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம். பரிசோதனையில் அவரின் வயிற்றில் ஸ்பூன்கள் இருப்பது தெரியவந்தது அதைத் தொடர்ந்தே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓராண்டாக்கு முன்னர், அவரை நாங்கள் போதை ஒழிப்பு மையத்தில் அனுமதித்தோம். அங்குதான் அவரை ஸ்பூன்களை உட்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர்” என்றார்.
UP | 62 spoons have been taken out from the stomach of 32-year-old patient, Vijay in Muzaffarnagar. We asked him if he ate those spoons & he agreed. Operation lasted for around 2 hours, he is currently in ICU. Patient has been eating spoons for 1 year: Dr Rakesh Khurrana (27.09) pic.twitter.com/tmqnfWJ2lY
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 28, 2022
அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், ராகேஷ் குரானா,”15 நாள்களுக்கு முன் அவரை என்னிடம் அழைத்துவந்தனர். எக்ஸ்-ரேவில் அவரையின் வயற்றிலும், பெருங்குடல் பகுதியிலும், உலோகத்திலான சில பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் கேட்டதற்கு, தன்னை கட்டாயப்படுத்தி ஸ்பூன்களை சாப்பிடவைத்ததாக கூறினார். அவருக்கு 2 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். இதற்குமுன், இதுபோன்று எந்த அறுவை சிகிச்சையும் நாங்கள் செய்ததில்லை” என்று கூறினார்.
அவர் உட்கொண்ட அனைத்து ஸ்பூன்களிலும், அதன் தலைகள் எடுக்கப்பட்டு, ஸ்பூன் தண்டுகள் மட்டும் உள்ளன. இதுவரை இதுதொடர்பாக, எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை. மேலும், விஜயகுமார் எப்போது இந்த ஸ்பூன்களை உட்கொண்டார் என்பதை உறுதியாக கூற இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.