உலகின் வலைதள பயன்பாட்டாளர்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் தேடல் செயலி தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் தேடும் விஷயங்களை புதிய மேம்பட்ட வடிவத்தில் நமக்கு கூகுள் வழங்குகிறது.
புதிதாக Multi Search ஆப்ஷன் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் நாம் ஒரே நேரத்தில் பல விஷயங்களை நாம் தேடமுடிடியும். இதனை நாம் இமேஜ் அல்லது வாக்கியங்களை வைத்து நாம் தேடமுடிடியும்.
மேலும் ஆங்கிலம் தவிர உலகில் உள்ள 70க்கும் மேற்பட்ட மொழிகளில் நாம் இனி தேடமுடிடியும். இதன் கூகுள் Lens வசதியும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் 8 மில்லியன் மக்கள் இந்த Lens வசதியை பயன்படுத்துவதாக தெரிகிறது.
ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் வாடிகையாளர்களுக்கு ஏற்றவாறு அதன் iOS ஆப்களிலும் இந்த கூகுள் தேடல் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் ஒரு விஷயத்தை தேடும் சமயம் அவர்களுக்கு படங்களை காட்டுவதை விட கூடுதலாக அந்த தேடல் சம்பந்தப்பட்ட வீடியோ, புகைப்படம், இடம், முக்கிய சுற்றுலா தளங்கள் போன்ற அனைத்தையும் காட்டும்.
பலர் பிடித்த உணவுகளை தேடும்போது அவர்களுக்கு அந்த உணவை காட்டுவது மட்டுமல்லாமல் அந்த உணவு எந்த உணவகத்தில் கிடைக்கும், அதேபோன்ற வேறு உணவுகள் போன்றவை நமக்கு தெரியும்.
கூகுள் மேப் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதிகளில் பல வசதிகள் குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதில் புதிய வசதியாக நாம் நமது தாய் மொழியில் தேடலை செய்யமுடியும்.
250க்கும் மேற்பட்ட உண்மையை போலவே இருக்கும் போட்டோக்களை கழுகுப்பார்வை மூலம் காட்டுகிறது. இந்த புதிய Google Map வசதி லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், நியூ யார்க், சான் பிரான்சிஸ்கோ, டோக்கியோ போன்ற நகரங்களில் முதல்கட்டமாக வெளியாகும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்