
ஆதார் இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த 'ஆதார்' படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றாலும் தியேட்டர்களில் பெரிய வசூலை பெறவில்லை. என்றாலும் ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
ஆதார் படத்திற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தயாரிப்பாளரின் மனைவி ராம்நாத் பழனிகுமாரிடம் காரை வழங்கினார்.