வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
சமீபத்தில் ஆன்லைனில் பொருட்கள் மலிவாக இருப்பதாக என் தோழி சொல்ல நானும் வீடு சுத்தம் செய்யும் திரவங்களை ஆர்டர் செய்தேன் .மூன்று திரவங்கள் 180 ரூபாய் .வடநாட்டுத் தயாரிப்புகளான அவைகளுக்கு வாங்கியவர்கள் தந்த .வெரி குட் நைஸ் என்று இருந்த பின்னூட்டங்கள் பொருள்கள் தரமாக இருக்கும் என்று நம்பவைத்தது .பார்சலும் வந்தது .ஆவலுடன் பிரித்துப் பார்த்து வாசனை அருமையாக இருந்ததும் மனமகிழ்ந்தேன் .
சரி சரியானவற்றையே வாங்கியுள்ளோம் என்று .வீட்டின் தரையை சுத்தம் செய்ய எண்ணி அந்த திரவத்தை குலுக்கி விட்டு ஊற்றினால் நுரையும் இல்லை ஒன்றும் இல்லை ..காரணம் அது நம்மூர் பினாயில் .இதை வாங்கவா ஆன்லைனில் நேரத்தையும் பணத்தையும் வீணாக்கினோம் என்று என்னையே நொந்து கொண்டேன் .இதே நம் பகுதியில் உள்ள கடையில் வாங்கியிருந்தால் மாற்றி இருக்கலாம் .ஆனால் ஆன்லைனில் ? பணம்தான் வீண் .
நம் பக்கத்தில் உள்ள அண்ணாச்சிக்கடையில் ஐம்பது ரூபாய் தந்தால் புதுசாக் கிடைக்கும் பினாயிலின் விலை ஆன்லைனில் அதிகமே . தேவையா இது ? இனி எக்காலத்திலும் அருகிலிருக்கும் நம்மூர் கடைகளை விட்டு முகம் அறியாத ஆன்லைன் வணிகத்தை ஊக்குவிக்க கூடாது என்று உறுதியும் எடுத்தேன்.
–சுபா தியாகராஜன்
சேலம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.