வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ் : உக்ரைனில், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்கள் நேற்று முறைப்படி ரஷ்யாவில் இணைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரகடனப்படுத்தினார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியாவை தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டது.
இந்த பிராந்தியங்கள் உக்ரைன் அரசுக்கு எதிரான கொள்கையை பின்பற்றி வரும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துகளை கேட்கும் ஓட்டெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் ரஷ்யாவுடன் இணைய இந்த பிராந்தியங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாஸ்கோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த நான்கு பிராந்தியங்களும் ரஷ்யாவுடன் முறைப்படி இணைக்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று பிரகடனப்படுத்தினார். ரஷ்யாவின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement