பீகார் மாநிலத்தில் ஜாமல்பூர்-சாகிப்காஞ்ச் பயணிகள் ரயில் லைலாக் பகுதியில் சென்ற போது, ரயிலின் ஜன்னல் வழியாக ஒரு பயணியிடமிருந்து செல்போனை திருடன் பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது பயணி திருடனின் கையையும், பணியனையும் லாவகமாக பிடிக்க ரயில் வேகமாக செல்ல தொடங்கியிருக்கிறது. வெளியே தொங்கிய திருடன் தன்னை காப்பாற்றுமாறும் தனது கைகளை விட்டுவிட வேண்டாம் என்றும் கொஞ்சி உள்ளார்.
இதை மற்ற பெரெத்தில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். ஆத்திரமடைந்த பயணிகள் திருட வந்தவரை உள்ளே இழுத்து வந்து அறைந்து, அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேபோன்ற ஒரு சம்பவம் பிகாரில் உள்ள பெகுசராய் பகுதியில் கடந்த 14-ம் தேதி நிகழ்ந்துள்ளது. செல்போனை திருட முயற்சித்தபோது, ரயில் நகர தொங்கிவிட்டது. இதையடுத்து, ஓடும் ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி திருடன் பயணிகளிடம் பிடிபட்டார். தன்னை கீழே விட்டு வேண்டாம் என கெஞ்சிய படி திருடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.