அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் இது தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை சேர்த்து தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர்.
அதற்கு ஓபிஎஸ் தரப்போ, எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளார்கள். எனவே தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.
அதற்கு நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம், நீங்கள் தானே இப்போது பொறுப்பில் இருக்கிறீர்கள், பிறகு ஏன் அவசர அவசராமாக தேர்தல் நடத்த முயல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது தேர்தலை நடத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.