சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதித்த வழக்கில், 6மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், சவுக்கு சங்கரை தமிழகஅரசு நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய நிலையில், அரசு தகவல்களை கசிய விட்டதாக கடந்த 2008ஆம் ஆண்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, அவரை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை பணி நிக்கம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது பணி நீக்கத்திற்கான நோட்டீஸ் கடலூர் சிறையில் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதை பெற சங்கர் மறுத்து தகராறு செய்ததாக வும் தகவல்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து சிறை நிர்வாகம், சவுக்கு சங்கரை ஒரு மாதத்திற்கு பார்வையாளர்களை சந்திக்க தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்து, சிறையில் சவுக்கு சங்கர் காலை முதல் அவர் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.