கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் திட்டம் ஒத்திவைப்பு… நிதின் கட்கரி…

டெல்லி: கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி (54), கடந்த சில மாதங்களுக்கு மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.  இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி மெர்சிடஸ் காரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் கார் சிக்கியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்ட்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்கான முக்கிய காரணஷமாக, அவர் பின்சீட்டில் இருந்தபோது,  சீட் பெல்ட் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நமது நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் கார் உள்பட 4 சக்கர வாகனங்களில் 6 ஏர்பேக் கட்டாய மாக்கப் படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்திருந்தார்.  அதன்படி,  இந்தியாவில் 8 பேர் வரை பயணிக்கும் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அந்த வாகனங்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்குவதற்கான புதிய பாதுகாப்பு விதிமுறை கொண்டு வரப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி 14ம் தேதி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வரைவு அறிவிப்பு வெளியிட்டது. அதில், 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட M1 வகையைச் சேர்ந்த அனைத்து வாகனங்களுக்கும் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்படுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. இந்த வரைவு அறிவிப்புக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்தார். .இந்த விதிமுறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில் 6 ஏர்பேக் பாதுகாப்பு விதியை அமல்படுத்துவதை அடுத்த ஆண்டு அக்டோபர் வரை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, புதிய விதிமுறை 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி நடைமுறைக்கு வரும். ஆட்டோமொபைல் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலி தடைகள் மற்றும் மேக்ரோ பொருளாதார சூழ்நிலையில் அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறி உள்ளார்.

பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் குறைந்தபட்சம் நான்கு சக்கரங்களைக் கொண்ட மோட்டார் வாகனங்கள் ‘M’ என குறிப்பிடப்படுகிறது. ‘M1’ என்பது ஓட்டுனர் இருக்கை தவிர கூடுதலாக 8 இருக்கைகளை உள்ளடக்கிய, பயணிகள் மோட்டார் வாகனம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.