வீட்டிற்கு வரவழைத்து உறவுவையும், நட்பையும் வலுப்படுத்த பெரிதும் உதவும் கொலு பண்டிகை :ஊரெங்கும் அமர்க்களப்படுகிறது.இந்த கொலுக்கள் பெரும்பாலும் பெண்கள்தான் வைப்பர், வித்தியாசமாக ஒரு ஆண் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கொலுவைத்து அசத்திவருகிறார்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஐடி துறையில் பணியாற்றி ஒய்வுபெற்றவர்.இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக வீட்டில் கொலுவைத்து அசத்திவருகிறார்.ஒவ்வொரு வருடமும் ஒரு தலைப்பில் கொலுவைப்பது இவரது வாடிக்கை இந்த வருடம் கிருஷ்ண துலாபாரம் என்ற தலைப்பில் கொலுவைத்துள்ளார்.
பாமா-ருக்மணி இருவரில் பாமாவிற்கு தான் எப்போதுமே உயர்த்தி என்ற எண்ணம் உண்டு இந்த எண்ணத்தை நீக்குவதற்காக நாரதரை வைத்து கிருஷ்ணர் ஒரு நாடகமாடுகிறார்.அந்த நாடகத்தின்படி துலாபாரத்தில் கிருஷ்ணர் ஒரு பக்கமாக அமர்ந்திருக்க மறுபக்கம் அவருக்கு நிகராக வைப்பதாக நினைத்து பாமா நகைகளை குவியல் குவியலாக குவித்தும் துலாபாரம் நேருக்கு வரவில்லை கடைசியில் ருக்மணி ஒரு துளசியை கொண்டுவந்து வைத்தபின் துலாபாரம் நேருக்கு வருகிறது.
என்னை நீங்கள் அடைய பொன்னோ பொருளோ தரவேண்டாம் சாதாரண துளசியே போதும் என்று பகவான் கிருஷ்ணர் சொல்வதே இந்த துலாபார தத்துவம்.
இந்த தத்துவத்தை இருநுாறுக்கும் அதிகமான பொம்மைகளை வைத்து உருவாக்கியிருக்கிறார் சுரேஷ்குமார் இன்னோரு விஷயமாக கேட்டால் பாட்டுப்பாடும் ‛அலெக்ஸா’ மூலமாக கிருஷ்ணரின் இந்து துலாபார கதையை நாடகம் போல பாட்டோடு நடக்கும்படி வடிவமைத்துள்ளார்.ஒரு இடத்தில் கிருஷ்ணர் மணைவிக்கு தலைவாரி விடுகிறார் இன்னோரு இடத்தில் பல்லாங்குழி விளையாடுகிறார் இப்படி கிருஷ்ணரை பலவிதமாக படைத்துள்ளர்.இவருக்கு இவரது மணைவி வசுமதி பெரிதும் உதவியுள்ளார்.
வீட்டில் உள்ள வாட்டர் கேன் உள்ளீட்ட பொருட்களைக் கொண்டு அதிகம் செலவில்லாமல் இவர் உருவாக்கியுள்ள இந்த கிருஷ்ணதுலாபாரம் கொலுவை பார்க்க விரும்புபவர்கள் அவருக்கு போன் செய்துவிட்டு செல்லவும் எண்;97890 99456.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement