காந்திநகர்: நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலான காந்திநகர் – மும்பை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி இன்று (செப்.,30) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன்படி, புதுடில்லி – வாரணாசி மற்றும் புதுடில்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ரயில் குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து மும்பை சென்ட்ரல் வரை இயக்கப்படுகிறது. இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை ஐ.சி.எப்.,பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு பின்னர் ஆமதாபாத் மெட்ரோ ரயிலில் கலுபூர் நிலையத்தில் இருந்து தூர்தர்ஷன் கேந்திரா நிலையம் வரை பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement