முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவருக்கு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு 14 கிலோ தங்க கவசத்தை பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்தோர் மக்களிடையே நீங்கா இடம் பிடித்தார்.
இதன் பின்னர், அடுத்தடுத்த தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜைகளில் அதிமுக பொருளாளர் என்ற முறையில்
கலந்து கொண்டார். இதற்காக மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் லாக்கரில் இருந்து தங்கக்கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் எடுத்து அணிவிப்பது வழக்கமாக இருக்கிறது.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை முடிந்ததும் தங்க கவசமானது மீண்டும் லாக்கரில் வைக்கப்படும். இந்த லாக்கரின் சாவி, அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் இருக்கும்.
ஆனால் இந்த முறை அதிமுக பொருளாளர் என்ற அடிப்படையில் வங்கியில் இருந்து தங்க கவசத்தை தேவர் சிலைக்கு அணிவிக்க போவது யார்? என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவின் தலைமை பதவி யாருக்கு? என்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள போட்டியும், அதையொட்டிய மோதல் போக்கும் தான்.
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு அதிமுகவுக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டபோது மாவட்ட ஆட்சியர்தான் தங்க கவசத்தை பெற்று தேவர் குருபூஜை முடிந்ததும் மீண்டும் வங்கியில் ஒப்படைத்தார்.
அதேபோல் தான் தற்போது எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு அதிமுக பிரிந்து கிடக்கிறது. எனவே, அதே நிலை இந்த ஆண்டும் தொடரவே வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி தங்க கவசத்தை பெற்று தேவர் சிலைக்கு சிறப்பு செய்து சமூக மக்களிடம் நற்பெயரை வாங்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மும்முரமாக உள்ளது.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோ உச்ச நீதிமன்றத்தில் சிறப்பான வாதங்களை எடுத்து வைத்து, அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், பிறகு
மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் தேவர் நினைவிடத்துக்கு கெத்தாக வரவும் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது.
வருகின்ற அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருக்கும் தேவர் குரு பூஜைக்கு 27ம் தேதி தான் தங்கக்கவசம் பெற வேண்டும் என்றாலும், இப்போதே பிரச்னை உருவாக தொடங்கி இருப்பது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.