புதுடில்லி, :இணையதள தேடு இயந்திரமான, ‘கூகுள்’ தளத்தில், இனி சமஸ்கிருதத்திலும் தகவல்களை தேடலாம். இதற்காக, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இணையதள தேடு இயந்திரமான கூகுள் தளத்தில், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நமக்கு தேவையான தகவல்களை தேடிப் பெறலாம். இந்த வரிசையில், சமஸ்கிருத மொழியிலும் தகவல்களை தேடிப் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்த, ஐ.சி.சி.ஆர்., எனப்படும் இந்திய கலாசார உறவு கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி.ஆர்., தலைவர் வினய் சகஸ்ரபூதே மற்றும் கூகுள் அதிகாரிகள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி, சமஸ்கிருதத்தில் முதல்கட்டமாக, ஒரு லட்சம் வார்த்தைகள், அதன் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்புடன் வழங்கப்பட்டுள்ளது.புதுடில்லி பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள், சமஸ்கிருத அறிஞர்கள் உதவியுடன், இந்த வார்த்தைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement