சர்தார் டீசர் வெளியீடு – 6 தோற்றங்களில் கார்த்தி
இரும்புத்திரை படத்தை இயக்கிய பி .எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சர்தார். இப்படத்தில் அவருடன் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன். லைலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தில் கார்த்தி, கதிரவன் என்ற ஐபிஎஸ் வேடத்திலும், சர்தார் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். என்றாலும் இப்படத்தில் அவர் ஆறு விதமான கெட்டப்பில் நடித்திருப்பதாக டீசரில் தெரிகிறது. அந்த ஆறு பேரும் ஒருத்தன்தான் என்று வில்லன் கர்ஜிக்கும் டயலாக் ஓங்கி ஒலிக்கிறது. ராணுவ உளவுத்துறை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி இருக்கும் சர்தார் படம் இதுவரை கார்த்தி நடித்துள்ள படங்களில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி உள்ளது.