ஆல்வார், :ராஜஸ்தானில், 16 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்து, பணம் பறித்து வந்த எட்டு இளைஞர்கள் மீது, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆல்வார் மாவட்டத்தில் உள்ள கிஷான்கர் பாஸ் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்கள், ஷகில் என்பவருக்கு கிடைத்துள்ளன. இதை வைத்து அவர், ‘பணம் தரவில்லை எனில், இப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன்’ என சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதில் பயந்த அச்சிறுமி, குறிப்பிட்ட இடத்துக்கு பணத்துடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த எட்டு இளைஞர்கள் சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அதை மொபைல் போனில் ‘வீடியோ’ எடுத்துள்ளனர்.பின் இந்த வீடியோவைவைத்து மிரட்டி, சிறுமியிடம் 50 ஆயிரம்ரூபாய் வரை பறித்து உள்ளனர். ஒரு கட்டத்தில் அச்சிறுமி தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால், சிறுமியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பினர். இது குறித்த புகாரின்படி, போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எட்டு பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement