சென்னை: சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் ரவுடி ஆகாஷ் (21) உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை உட்கொண்டதால் ரவுடி ஆகாஷ் நேற்று உயிரிழந்தார். ரவுடி ஆகாஷ் மரணம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
