சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 8 முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது. இது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவிழா காலங்களில், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளை வழியனுப்பவும், ஊருக்கு வருபவர்களே வரவேற்கவும், சொந்தபந்தங்கள் ரயில் நிலையங்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் திருவிழாக் காலங்களில் ரயில் நிலையங்கள் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், பிளாட்பாரம் டிக்கெட் விலையை இரு மடங்காக உயர்த்தி தெற்கு ரயில்வே விற்பனை செய்கிறது.
அதுபோல, தற்போது விழாக்காலத்தை முன்னிட்டு, பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, செப்டம்பர் 30ந்தேதி முதல் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 8 ரெயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் உயர்த்தப்பட்டுள்ளது. பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.