திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் செப்டம்பர் மாதம் டதிராவிட மாதம்’ என்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கடந்த ஒரு மாதமாக தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேசஸில் பல்வேறு தலைவர்கள் உரையாற்றி வந்தனர். திராவிட மாதக் கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று (செப்டம்பர் 30) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான
ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாற்றுகிறார்.
‘திராவிட அரசு’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் சாரம்சம்:
திராவிட இயக்க கொள்கைகள், சித்தாந்தங்களை ஒரு காலத்தில் எழுத்து, மேடை பேச்சு, திரைப்படங்கள் போன்றவற்றின் மூலம் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் சென்றோம். ஆனால், தொழிற்நுட்பம் வளர்ச்சி பெற்றுவிட்ட இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களின் வாயிலாக பல்வேறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. இதனை கழகத்தின் ஐடி விங் நிர்வாகிகள் கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் வகையில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் செல்ஃபோனில் செலவிடுகிறார் என்றும், மொபைல்ஃபோனில் செய்தி வாசிக்கும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கழக நிர்வாகிகள் சரியான விதத்தி்ல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களை பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம். அதேசமயம், சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள், பொய்கள் பரப்பப்படும்போது அதனை சுட்டிக்காட்டி உண்மையை உடன்பிறப்புகள் எடுத்துரைக்க வேண்டும்.
வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், கடந்த 50 ஆண்டுகளில் தமி்ழ்நாடு எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என புரியும். தமிழ்நாட்டை தலைநிமிர செய்தது திராவிடம்.
நான் தோனியின் ரசிகன் என்று தெரிந்தே ராஜாவும், பிடிஆரும் திராவிட மாத கொண்டாட்டத்தின் முடிவில் இன்று என்னை ஃபினிஷிங் ஆட வைத்துள்ளனர் என்று குதூகலமாக பேசினார முதல்வர் ஸ்டாலின்.