தீவிரமாகுமா குரங்கம்மை? டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு நோய்த்தொற்று உறுதி

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, தலைநகரில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகள் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, 30 வயதான நைஜீரிய பெண் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.  

ஆதாரங்களின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளைத் தவிர, வேறு எந்த நோயாளிக்குக்ம் குரங்கம்மை நோய் திப்பு இல்லை.

மங்கி பாக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குரங்கம்மை நோய், என்பது ஒரு வைரஸ் நோயாகும், இது பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம், நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த நோய் உடல் திரவங்கள் அல்லது சுவாச துளிகள் மூலமாகவும் பரவுகிறது.

குரங்கு அம்மை நோய் அறிகுறிகள்

உடல் அசதி, காய்ச்சல், உடல் முழுவதும் கொப்பளங்கள், தொண்டை புண், இருமல், நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, உடல் சோர்வு, கண்வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், வலிப்பு, இடுப்பு வலி உள்ளிட்டவை குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

இந்த நோய் பாலியல் செயல்பாடு மூலமாகவும் பரவுகிறது. நோய் பாதித்தவர்களுக்கு, முகத்தில், வாயின் உள்ளே, மற்றும் கைகள், கால்கள், மார்பு, பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாய் போன்ற உடலின் பிற பகுதிகளில் தோன்றும் பருக்கள் அல்லது கொப்புளங்கள் போல் தோன்றும். சொறி முழுவதுமாக குணமடைவதற்கு முன் பல்வேறு நிலைகளில் செல்கிறது. குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், அது 2-4 வாரங்கள் வரை நீடிக்கும்.

அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டால், ஒருவர் உடனே தன்னை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு மட்டுமல்லாது வளர்ப்பு பிராணிகள் உள்பட அனைத்து விலங்குகளிடமிருந்தும், விலகி இருக்க வேண்டும்.

தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக பாராமரித்து, மூக்கு, வாய் பகுதிகளை அடிக்கடி தொடாமல் இருத்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது, குரங்கு அம்மை நோயிலிருந்து உங்களைக் காக்கும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.