புதுடில்லி, :பார்லிமென்டில் புதிதாக நிறுவப்பட்ட தேசிய சின்னத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில், தேசிய நினைவுச் சின்னம் சமீபத்தில் நிறுவப்பட்டது. 19.6 அடி உயரமும், 9,500 கிலோ எடையும் உடைய, சிங்கம் மற்றும் அசோக சக்கரத்துடன் கூடிய இந்த தேசிய சின்னத்தை, பிரதமர் மோடி கடந்த ஜூலையில் திறந்து வைத்தார்.இந்நிலையில், புதிதாக நிறுவப்பட்ட தேசிய சின்னம், ஏற்கனவே இருந்ததை விட வடிவத்தில் மாறுபட்டு இருப்பதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, அல்தனிஷ் ரெய்ன், ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகிய வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில், ‘புதிதாக நிறுவப்பட்டுள்ள தேசிய சின்னத்தில், சிங்கங்களின் வடிவம் மாறுபட்டுஉள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட சிங்கத்தில், அவற்றின் முகம் ஆக்ரோஷமாகவும், கர்ஜிக்கும் வகையிலும் உள்ளது’ என, தெரிவித்திருந்தனர்.இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘புதிதாக நிறுவப்பட்டு உள்ள தேசிய சின்னம், 2005 தேசிய சின்னத்தின் சட்ட விதிகளை மீறியிருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது’ என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement