சென்னை கமலாலயத்தில் மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தேல் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் பேசியபோது, “கெயில் நிறுவனம் மூலமாக எரிவாயு இணைப்பை குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு அனுமதிக்கவில்லை. எனவே தான் அதை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் இதன் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படும் பொழுது எரிவாயுவின் விலை குறைவாக இருக்கும். தமிழ்நாட்டில் புதியதாக பெட்ரோல் பங்குகள் துவங்க அனுமதிகள் வழங்கப்பட இருக்கின்றன.
புதிய பெட்ரோல் பங்க் துவங்க விருப்பம் இருப்பவர்கள் உரிமம் வேண்டி விண்ணப்பிக்கலாம். அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எரிவாயு நெருப்புக் கொள்ளக்கூடிய வசதியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் மாசை குறைக்க இனி பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.