பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கான்வாயில் 42 கார்கள் – விளாசும் எதிர்க்கட்சிகள்!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பக்வந்த் மான் கான்வாயில் 42 கார்கள் உள்ளது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 90-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் கான்வாய் குறித்து தகவல் அறியும் அறியும் சட்டத்தின் கீழ் அறிக்கை பெறப்பட்டது. அதில், முதலமைச்சர் பகவந்த் மான் கான்வாயில் 42 கார்கள் உள்ளன. இது முன்னாள் முதலமைச்சர்கள் பிரகாஷ் சிங் பாதல், அமரீந்தர் சிங், சரண்ஜித் சிங் சன்னி ஆகியோருக்கு இந்த கான்வாயை விட அதிகம்.

இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பிரகாஷ் சிங் பாதல் முதலமைச்சராக இருந்த போது (2007 – 2017) கான்வாயில் 33 கார்கள் இருந்தன. அமரீந்தர் சிங் முதலமைச்சராக இருந்த போதும் அதில் எந்தவித மாற்றம் இல்லை. சரண்ஜித் சிங் முதலமைச்சராக இருந்த போது 6 கார்கள் சேர்க்கப்பட்டு 39 கார்கள் இடம் பெற்றன. ஆனால், தன்னை ஆம் ஆத்மி எனக் கூறிக் கொள்ளும் பகவந்த் மான் முதலமைச்சரான பின்பு கான்வாயில் 42 கார்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.

முதலமைச்சர் ஆவதற்கு முன்பு விமர்சனம் செய்ததற்கும், முதலமைச்சரான பிறகு அவரது நடவடிக்கைகளுக்கும் முரண்பாடுகள் உள்ளன. அவர் எம்.பி.,யாக இருந்த போது, ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் கான்வாய் குறித்து கடுமையாக விமர்சித்தார். மிகப்பெரிய கான்வாய் அமைக்கும் அளவிற்கு என்ன காரணம் வந்தது என மக்களிடம் விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.