ஆந்திராவில் கஞ்சா விநியோகம் செய்யும் இளைஞர்களை பிடிக்கச் சென்றபோது, புதுச்சேரி காவல்துறையினரை அரிவாளை காட்டி மிரட்டிய காட்சி வெளியாகியுள்ளது.
புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் கடந்த 24 ஆம் தேதி மேட்டகருவில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டிருந்த அதேப் பகுதியை சேர்ந்த பெட்டி ரெட்டி கோவிந்து மற்றும் சல்லாடி சதீஷ் ஆகியோரை ஏனாம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த ரிது பிரகாஷ், சிந்தாலா யாமினி பிரசாத் ஆகியோரிடம் இருந்து தான் கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து விசாகப்பட்டிணம் விரைந்த ஏனாம் போலீசார், விற்பனைக்கு கஞ்சா சப்ளை செய்த ரித்து மற்றும் சிந்தாலவை பிடிக்க சென்றபோது, அதில் ரித்து பிரகாஷ் போலீசாரை திரும்பி போகக் கூறி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் அந்த ரித்துவை லாவகமாக மடக்கிப் பிடித்த போலீசார் மற்றொரு இளைஞரான சிந்தாலவையும் பிடித்து, அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா, மூன்று செல்ஃபோன், அரிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரையும் லாவகமாக காவல்துறையினர் கைது செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM