புதுச்சேரி: மின் ஊழியர் பிரச்னை – ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆளுநர தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக இன்று மூன்றாவது நாளாக ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு; அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
image
இந்த நிலையில் ஆளுநர் மாளிகைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தலைமை செயலாளர் ராஜுவ் வர்மா, மின் துறை செயலர் அருண் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மின் வினியோகம் தடைபட்டால் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை எவ்வாறு சமாளிப்பது. மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் 35 நிமிடங்கள் ஆலோசிக்கப்பட்டது.
image
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்… அரசு நல்ல முடிவுகளை எடுக்கின்றது மின்துறை ஊழியர்கள் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு எடுக்கும் எந்த முடிவுகளும் மின்துறை ஊழியர்கள், அதிகாரிகள், மற்றும் பொதுமக்களை பாதிக்க்காது.
அரசு எடுத்துள்ள விஞ்ஞான பூர்வமான முடிவு. மின்துறை தனியார் வசமாவதால் மின் இழப்பு தவிர்க்கப்பட்டு மின் கட்டணம் குறைவாக இருக்கும். அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஊழியர்கள் சுயநலத்திற்காக போராடக்கூடாது. அரசு எடுக்கும் எந்த முடிவும் யாரையும் பாதிக்காது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.