அமெரிக்காவின் புளோரிடாவை தாக்கிய இயான் புயலால் மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இயான் புயல் நேற்று முன்தினம் புளோரிடாவை தாக்கியது இதனால் நகர் முழுவதும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது மேலும் மின்சாரம் தடைபட்டுள்ளதால் இருளில் முழ்கியுள்ளது .
புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார்