புதுடெல்லி: மகாராஷ்டிராவை சேர்ந்த அகமது பீர்சாடே என்பவர் சார்பில், எம்.ஆர்.ஷம்சாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தி மனுவில், ‘மத மோதல்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள், அரசு அலுவலகங்களில் அரசியல் சட்டத்தின் முகப்புரையை, உள்ளூர் மொழிகளில் எழுதி வைக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று கோரினார். இதை விசாரித்த நீதிபகள், ‘இது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் எதுவும் செய்ய முடியாது,’ என்று கூறி மனுவை நிராகரித்தனர்.
