
மம்முட்டி படத்தை இயக்கும் கிரேட் இண்டியன் கிச்சன் இயக்குனர்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சிறிய பட்ஜெட் திரைப்படமாக வெளியாகி பொதுமக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தி கிரேட் இண்டியன். கிச்சன். குறிப்பாக வேலைக்கு போக விடாமல் வீட்டிலேயே கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரால் சாத்வீக அடக்குமுறைக்கு ஆளாகும் படித்த பெண்கள், ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி என்பவர் இயக்கியிருந்தார்.
மலையாளத்தில் நிமிஷா சஜயன் என்பவர் கதாநாயகியாக நடித்த இந்த படம் தமிழில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உருவாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஜியோ பேபி இயக்கத்தில் ஸ்ரீதன்யா கேட்டரிங் சர்வீஸ் என்கிற படமும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் படத்தை தான் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஜியோ பேபி. இந்த படத்தை மம்முட்டி தானே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது