ரஷ்யர்கள் பின்லாந்துக்குள் நுழைவதை ஷெங்கன் சுற்றுலா விசாவைக் கொண்டு தடுக்க முடிவெடுத்திருப்பதாக பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ தெரிவித்திருக்கிறார். ஆனால் மனித உரிமைகள் அடிப்படையில் படிப்பு, வேலை வேண்டி வருபவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
195 நாள்கள் விண்வெளி பயணத்துக்குப் பிறகு ரஷ்ய விண்வெளி வீரர்கள் வியாழக்கிழமையன்று கஜகஸ்தானில் தரையிறங்கியதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.
எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பிறகு அவர் வாழ்ந்த விண்ட்சர் மாளிகை கடந்த வியாழனன்று மீண்டும் திறக்கப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா செய்யும் பழக்கத்தை வளர்க்க முடிவுசெய்திருக்கிறது சவுதி அரேபியா அரசு.
இயன் சூறாவளியின் தாக்கத்தால் புளோரிடாவில் சுமார் 2 மில்லியன் வீடுகளில் மின் தடை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூறாவளி உலக பொருளாதாரத்தில் சுமார் 67 மில்லியன் டாலர் மதிப்பிலான இழப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் புதிய மசோதாவின் கீழ், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் அந்த நாட்டில் வசித்துவரும் புலம்பெயர்ந்தோர் நிரந்தர குடியுரிமை அந்தஸ்த்துக்கு தகுதி பெறலாம்.
மியான்மரில் பதவிநீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சாங் சூகி மற்றும் அவர் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சீன் டர்னெல் ஆகியோருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. ஊழல் வழக்கில் முன்னதாகவே 17 ஆண்டுக்கால சிறைத் தண்டனை சூகி-க்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாப் பாடகி ஷகிராவுக்கு எதிராக ஸ்பெயின் நீதிமன்றம் 16.3 மில்லியன் டாலர் வரி ஊழலில் குற்றம்சாட்டியிருக்கிது. அதனால், அவர் நீதிமன்ற விசாரணை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
ஜப்பானில் முன்னாள் ராணுவ வீராங்கனையின் பாலியல் குற்றச்சாட்டுக்கு, அந்த நாட்டு ராணுவத் தளபதி பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறார்.
3 வருடங்களுக்குப் பிறகு சீனா அதன் முதல் சர்வதேச பேட்மின்டன் போட்டியை டிசம்பர் மாதம் நடத்தும் என்று உலக பேட்மின்டன் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.